Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

தூத்துக்குடி 14,44,432, குமரி 15,20,935 வாக்காளர்கள்

தூத்துக்குடி/கோவில்பட்டி/நாகர்கோவில்

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக் கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ் நேற்று வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் 14,44,432 வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.செந்தில்ராஜ் வெளியிட் டார். அதன் நகலைஎம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன் (அதிமுக), பெ.கீதாஜீவன் (திமுக), அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (திமுக) உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் ஆட்சியர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணி 16.11.2020 முதல் 20.01.2021 வரை நடைபெறுகிறது. இதன் பொருட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் 7,07,905 ஆண்கள், 7,36,397 பெண்கள், 130 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,44,432 வாக்காளர் கள் உள்ளனர். மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் மொத்தம் 1,596 வாக்குச்சாவடிகள் இருந்தன.தற்போது புதிதாக 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தவாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,603 ஆக உயர்ந்துள்ளது.

1.1.2021-ல் 18 வயது பூர்த்தியா கும் அனைவரும் வக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவைகளுக்கு 2021 ஜனவரி 20-ம் தேதி வரை மனு அளிக்கலாம். இதற்காக 21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். இதன் தொடர்ச்சியாக இறுதி வாக்காளர் பட்டியல் 20.01.2021-ல்வெளியிடப்படும்.

புதிதாக பெயர்சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தங்களை மேற்கொள்ள படிவம் 8, தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க படிவம் 6 ஆகியவற்றில் விண்ணப்பிக்க வேண்டும். www.nvsp.in என்ற இணையதளத்தில் படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்றார்.

கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று காலை கோட்டாட்சியர் ஜே.விஜயா வெளியிட்டார். இதன்படி 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 7,11,555 வாக்காளர்கள் உள் ளனர்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேற்று வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி பட்டியலை பெற்றுக்கொண்டார்.

மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியான துணை வாக்காளர் பட்டியலின்படி 15,29,159 வாக்காளர்கள் இருந்தனர். அதன்பின்னர் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடைபெற்றது. புதிதாக 3599 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 11,823 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 15,20,935 வாக்காளர்கள் உள்ளனர்.ஆண் வாக்காளர்கள் 7,63,148, பெண் வாக்காளர்கள் 7,57,598, இதரர் 189 பேர் ஆவர். ஏற்கெனவே இருந்த துணை வாக்காளர் பட்டியலைவிட, 8,224 வாக்காளர்கள் குறைந்துள்ளனர். அதிகபட்சமாக, கன்னியாகுமரி தொகுதியில் 2,82,839 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக பத்மநாபபுரம் தொகுதியில் 2,31,378 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சரண்யா அறி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)மெர்சி ரம்யா மற்றும் கட்சி பிரமுகர் கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x