Published : 16 Nov 2020 03:14 AM
Last Updated : 16 Nov 2020 03:14 AM
வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் தீபாவளி பண்டிகையை யொட்டி, தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்ததாக 641 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாவட்ட எல்லைப்பகுதிகள், முக்கிய சாலை சந்திப்புகள், வழிபாட்டுத் தலங்கள், மார்க்கெட், பஜார் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, பான்பராக், மாவா மற்றும் மதுபாட்டில்களை விற்பனை செய்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் தீபாவளியன்று ஒரே நாளில் குட்கா, பான்மசாலா போன்ற தடை செயயப்பட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்த 187 பேர், மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த 111 பேர் என மொத்தம் 298 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப் பொருட்களை விற்பனை செய்த வழக்கில் 80 பேரும், மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த வழக்கில் 120 பேர் என மொத்தம் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குட்கா, பான்மசாலா பொருட்களை விற்பனை செய்த 49 பேரும், மதுபாட்டில்கள் விற்பனை செய்த 94 பேர் என 143 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தீபாவளியன்று ஒரே நாளில் போதைப் பொருட்கள், மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த வழக்கில் 641 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT