Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM

இலவச கல்வி திட்டத்தில் தனியார் பள்ளியில் காலியிடங்களுக்கு நாளை 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குழந்தைகளுக்கானஇலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009 சட்டப்பிரிவின்படி, சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2020- 2021 கல்வி யாண்டுக்கு திருப்பூர் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை (எல்.கே.ஜி. மற்றும் 1-ம் வகுப்பு) 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் பூர்த்தி செய்யப்படாத காலியிடங்களுக்கு, இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் விண்ணப்பித்த பெற்றோர், நாளை (நவ.12) காலை 9 மணிக்கு சேர்க்கை கோரிய பள்ளிக்கு நேரில் சென்று, நேரடி சேர்க்கை, குலுக்கல் முறையில் கலந்தாய்வு மற்றும் சேர்க்கையில் கலந்துகொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x