Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM
நிலத்தின் உரிமையாளர் இறந்துவிட்ட நிலையில் முறைகேடாக அவரது நிலத்தை மற்றொருவருக்குக் கிரையம் செய்ய உதவிய சார்-பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பெலாத்துரையைச் சேர்ந்த முருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
விருதுநகர் மாவட்டம், அப்பய நாயக்கன்பட்டியில் எனது தந்தை அய்யாச்சாமிக்குச் சொந்தமான நிலம் உள்ளது. 2000-ம் ஆண்டில் தந்தை இறந்துவிட்டார். எனது பெற்றோருக்கு நான் மற்றும் எனது சகோதரர் பெருமாள் ஆகி யோர்தான் சட்டப்பூர்வ வாரிசுகள். 2005-ல் எனது சகோதரரும் இறந்துவிட்டார்.
2018-ல் எனது தந்தை பெயரில் இருந்த நிலத்தை எனது பெயரிலும், எனது சகோதரர் பெருமாளின் மனைவி, அவரது பிள்ளைகள் பெயருக்கும் மாற்றம் செய்ய முடிவு செய்து பந்தல்குடி சார்-பதிவாளர் அலுவலகம் சென் றோம்.
ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பு என் தந்தை அவரது பெயரில் இருந்த நிலத்தை தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த மயில்வாகனனுக்கு கிரையம் செய்து கொடுத்திருப்பதாக சார்-பதிவாளர் அலுவலகப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனது தந்தை 2000-மாவது ஆண்டில் இறந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து, அவர் எப்படி நிலத்தைக் கிரையம் செய்து கொடுக்க முடியும்.
இது தொடர்பாக விருதுநகர் எஸ்.பி.யிடம் புகார் அளித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எங்கள் நிலத்தை மீட்டு ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத் தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சார்- பதிவாளரின் தலையீடு இல்லாமல் முறைகேடாகப் பத்திரப்பதிவு நடந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற முறைகேட்டைத் தடுக்காவிட்டால் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையைப் பொது மக்கள் இழக்க நேரிடும். எனவே சம்பந்தப்பட்ட சார்- பதிவாளரையும், முறைகேடாக நிலத்தைக் கிரையம் செய்த வரையும் கைது செய்ய வேண்டும். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். மனுதாரரின் தந்தை பெயரில் இருந்த நிலத்தைப் பத்திரப்பதிவு செய்து முறைகேடுக்கு உடந்தையாகச் செயல்பட்ட சார்- பதிவாளரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT