Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM
ஓசூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரக்கட்டுப்பாட்டு சான்றி தழை ஆட்சியர் வழங்கினார்.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தேசிய சுகாதார முகமை மற்றும் மத்திய குடும்பநலத்துறை மூலம் தமிழகத்தில் வட்டார அளவில் உள்ள அரசு மருத்துவமனையில் வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகளை ஆய்வு செய்து தேசிய தர கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழக அளவில் 12 அரசு மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டது. அவற்றில் ஓசூர் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகள் மற்றும் சிறப்பான சிகிச்சை முறைகள் மற்றும் சுகாதாரமான பராமரிப்புக்காக மருத்துவமனையை தேசிய சுகாதார முகமை குழுவினர் ஆய்வு செய்து பின்னர் தேர்வு செய்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய தர கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக முகாமில் தேசிய தர கட்டுப்பாட்டு சான்றிதழை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் பூபதியிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, தேசிய தர கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ், மருந்தாளுனர் பேட்டராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT