Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘2020-21-ம் கல்வி ஆண்டு முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அக்டோபர் 28 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மேலும், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், வணிகவியல், சர்வதேச வணிகம், கணினி அறிவியல், கணிதம், ஆடை வடிவமைப்பியல் மற்றும் நாகரிகம், விலங்கியல், இயற்பியல் ஆகிய முதுநிலைப் பட்ட பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள், கல்லூரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் ரூ.60 செலுத்தி காலை 11 முதல் மாலை 3 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல, இளநிலை பட்ட வகுப்பில் கணிதம் பாடப் பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை சரிபார்த்து தரவரிசைப் பட்டியலை தயார் செய்து, வரும் 11-ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். இதில் பங்கேற்கும் மாணவர்கள், தங்களது இளநிலை பட்டவகுப்பு மதிப்பெண்கள் பட்டியல், சாதிச் சான்றிதழ்,பிளஸ்2 மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், இரண்டுபாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கல்லூரிக்குசெலுத்த வேண்டிய கட்டணத்தையும் கொண்டுவர வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT