Published : 08 Nov 2020 03:12 AM
Last Updated : 08 Nov 2020 03:12 AM

17 குளங்களில் ரூ.7 கோடியில் குடிமராமத்து நீர்வள ஆதார அமைப்பு தலைவர் ஆய்வு

ஏரல் அருகே இருவப்பபுரம் பேய்குளம் 5-வது மடை கடைசி பகுதியில் கட்டப்பட்டுள்ள தொட்டிப் பாலத்தை தமிழ்நாடு நீர்வள ஆதார அமைப்பு தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் (குடிமராமத்து திட்டம்) சத்யகோபால் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் மூலம் இந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை தமிழ்நாடு நீர்வள ஆதார அமைப்பு தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் (குடிமராமத்து திட்டம்) சத்யகோபால் நேரில் பார்வை யிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு நீர்வள ஆதார அமைப்பு தாமிரபரணி கோட்டத்தின் மூலம் 9 குளங்கள் ரூ.4.27 கோடி மதிப்பிலும், கோரம்பள்ளம் கோட்டத்தின் மூலம் 3 குளங்கள் ரூ.85 லட்சம் மதிப்பிலும், வைப் பாறு கோட்டத்தின் மூலம் 5 குளங் கள் ரூ.1.82 கோடி மதிப்பிலும் புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும் சில பணிகள் நடைபெற்று வருகின் றன. இப்பணிகளை தமிழ்நாடு நீர்வள ஆதார அமைப் பின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் (குடிமராமத்து திட்டம்) சத்யகோபால் (ஓய்வு) ஆய்வு செய்தார். ஏரல் வட்டம் இருவப்பபுரம் பேய்குளம் பகுதியில் ரூ.52 லட்சம் மதிப்பில் குளம் ஆழப்படுத்துதல், கரை பலப்படுத்துதல், மடை புனர மைப்பு செய்தல் ஆகி யவை பேய்குளம் பாசன விவசாய சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இருவப்பபுரம் பேய்குளம் 5-வது மடை கடைசி பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பில் உப கால்வாய் பகுதியில் தொட்டி பாலம் கட்டப்பட்டுள்து. இப்பணிகளையும் 4-வது மடை தொட்டி பாலம் பகுதியில் ரூ.17.52 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொட்டி பாலத்தையும் பார்வையி ட்டார். ஓடையின் இருபுறங்களிலும் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர்களையும், திட்ட மதிப்பீடு அடிப்படையில் சரியான அளவில் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, தூத்துக்குடி - திருநெல்வேலி மாவட்ட நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x