Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் காணொலிக் காட்சி மூலம் வகுப்புகள் தொடக்கம்

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. கல்லூரியின் நிர்வாகத்தினர் சீதா வள்ளியப்பா, சீதா தியாகு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

சேலம்

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 2020-21-ம் கல்வி யாண்டிற்கான இளங்கலை பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.

கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா முன்னிலையில் விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் சேவியர் அல்போன்ஸ் கலந்து கொண்டு பேசினார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் வரவேற்று பேசினார். முன்னதாக கல்லூரியின் நிர்வாகத்தினர் சீதா வள்ளியப்பா, சீதா தியாகு மற்றும் முதலாமாண்டு மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் சேவியர் அல்போன்ஸ் பேசியது:

மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் முக்கியத்துவத்தையும், தனித்துவத்தையும் இழந்து விடாமல் இருக்க வேண்டும். இதற்கு தன்னம் பிக்கையும், விடாமுயற்சியும் மிக அவசியம். சிறந்த உள் கட்டமைப்பு, நல்ல பேராசிரியர்கள், மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்து தல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால்தான் அகில இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சோனா கல்வி குழுமத்தின் நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளைதுறைத்தலைவர் ரேணுகா உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்திருந்தனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x