Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சின்னதானக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் சுசிதா கிருபாநிலானி(25). இவர், கடலூர் கூட்டுறவுத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றினார். இவருக்கும் எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த சிவநாதன் மகன் சந்தோஷ்குமாருக்கும்(28) கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. வழக்கறிஞருக்கு படித் துள்ள சந்தோஷ்குமார், கடலூரில் ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
திருமணத்துக்கு 50 பவுன் நகை, ஒரு கார் கேட்டிருந்த நிலையில் 45 பவுன் நகை கொடுக்கப்பட்டுள்ளது. மீதி5 பவுன் மற்றும் காரை பின்னர் தருகி றோம் என்று சுசிதா கிருபாநிலானியின் பெற்றோர் கூறியுள்ளனர். திருமணத் துக்கு பின்னர் தவணை முறையில் அவரது பெயரில் காரும் வாங்கிக் கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த சில நாட்களில் சந்தோஷ்குமாரும், அவருடைய குடும்பத்தினரும் 5 சவரன் நகையைக் கேட்டு வாக்குவாதம் செய்ததால் சுசிதா கிருபாநிலானி மனஉளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படு கிறது. இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் சொல்லி அழுததாகவும் கூறப் படுகிறது. கடந்த 31-ம் தேதி சுசிதா கிருபாநிலானி, தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து 2-ம் தேதி வேலைக்கு சென்று விட்டு கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 3-ம் தேதி சுசிதா கிருபாநிலானி அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து கடலூர் திருப்பாதிரி புலியூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், வரதட்சணை கேட்டதால் தான் சுசிதா கிருபாநிலானி தற்கொலை செய்தார். இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக் குப் பதிவு செய்து, தற்கொலைக்கு தூண்டியதாக சுசிதா கிருபாநிலானியின் கணவர் சந்தோஷ்குமார், அவரது தாயார் இந்திரா ஆகியோரை கைது செய்தனர். மேலும் சந்தோஷ்குமாரின் சகோதரி சுபயை தேடி வருகின்றனர். திருமணம் ஆகி 2 மாதங்களே ஆவதால்கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT