Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM
மின்வாரியத்தை தனியார்மயமாக்க முயற்சிப்பதைக் கண்டித்து தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தேனி பங்களாமேட்டில் நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய பணியாளர் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் எம்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஆர்.மூக்கையா, சிஐடியூ மாநில துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை மின்நிலையம், உயர் மின்பாதை பராமரிப்புகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. காலிப் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.
மதுரைமதுரே கோ.புதூர் அருகே மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட ஊழியர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை கோ.புதூர் பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தர்ணா நடைபெற்றது. மின் கழக தொமுச துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.தமிழ்ச்செல்வம், சிஐடியூ மாநகர் மாவட்டச் செயலாளர் டி.அறிவழகன், எச்எம்எஸ் மாநில இணைப் பொதுச்செயலாளர் ரா.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளன மாவட்டத் தலைவர் ஆதிமூலம் தலைமை வகித்தார். ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தர்ணாவுக்கு மின்வாரிய தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாவட்டச் செயலாளர் வி.சி.கே.மோகன் தலைமை வகித்தார். சிஐடியூ மாநில துணைத் தலைவர் ஆர்.குருவேல், ஐக்கிய தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் எம்.காசிஅய்யா பங்கேற்றனர்.
சிவகங்கை
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சிவகங்கையில் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் தர்ணா நடந்தது.நிர்வாகிகள் கோகுலவர்மன், சுப்ரமணியன், ஜெயப்பிரகாஷ், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாநிலச் செயலாளர் உமாநாத் பேசினார்.
திண்டுக்கல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT