வெள்ளி, டிசம்பர் 27 2024
Last Updated : 05 Nov, 2020 03:13 AM
Published : 05 Nov 2020 03:13 AM Last Updated : 05 Nov 2020 03:13 AM
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் என்ற சொக்கநாதர் (39). தனது 13-வது வயதிலேயே ஊரைவிட்டு வெளியேறினார். காசிக்குச் சென்ற அவர் அங்கு தீட்சை பெற்று, அகோரியாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டரை மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பி வந்தார். நேற்று அங்குள்ள 12 அடி ஆழக் குழியில் தவம் செய்து ஜீவசமாதி அடையப் போவதாக கூறினார். பக்தர்களும் இதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர். இதுபற்றி தகவல் அறிந்த ராஜதானி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவரைத் தடுத்து நிறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT