Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM

இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக மின்மோட்டார் ஷெட்டில் பதுக்கிய 140 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பண்ணவயல் கிராமத்தில் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான வயலில் உள்ள மின்மோட்டார் ஷெட்டில், இலங் கைக்கு கடத்துவதற்காக கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத் திருப்பதாக தஞ்சாவூர் கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், டிஎஸ்பி சிவசங்கர் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று மின்மோட்டார் ஷெட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றினர். இதன் மொத்த எடை 140 கிலோ எனவும், இதன் மதிப்பு ரூ.14 லட்சம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

கஞ்சா பொட்டலங்களை அங்கு பதுக்கி வைத்திருந்த பட்டுக்கோட்டை வட்டம் குப்பத்தேவன் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன்(36), பண்ணவயல் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜா(29), திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரைச் சேர்ந்த செல்லப்பன்(52) மற்றும் வீரமணி(30) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள், ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து இலங்கைக்கு கடத்திச் செல்லத் திட்டமிட்டு ராஜாவின் தாய் மாமன் கண்ணனின் வயலில் உள்ள மின்மோட்டார் ஷெட்டில் பதுக்கி வைத்திருந்தனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை யும், கைது செய்யப்பட்ட 4 பேரையும் நாகை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் போலீஸாரிடம் கியூ பிரிவு போலீஸார் நேற்று ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x