Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM
வைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரி தெற்கு கோட்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமையாதாஸ் (52). விவசாயியான இவர் பாஜக மாவட்ட அமைப்புசாரா பிரிவு செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை ஆழ்வார்திருநகரியில் உள்ள ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிள், வைக்கோல் படப்புக்கு தீவைக்கப்பட்டது.
ராமையாதாஸ் கொலை யில், குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. இவ்வழக்கில், 6 பேரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
எஸ்பி எஸ்.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமையாதாஸ் தனது வயலில் உளுந்து பயிரிட்டுள்ளார். அந்த வயலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்திருப்பேரையைச் சேர்ந்த முத்து மகன் மாரி (49) என்பவரது ஆடு மற்றும் மாடுகள் மேய்ந்து பயிரை சேதப்படுத்தியுள்ளன. இதுகுறித்து ராமையாதாஸ், மாரியிடம் சத்தம் போட்டு, பயிர் சேதமடைந்ததற்கு நஷ்டஈடு கேட்டுள்ளார். இது தொடர்பாக, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே ராமையாதாஸை கொலை செய்துள்ளனர். தனிப்படை போலீஸார் துரித நடவடிக்கை எடுத்து, கொலை நடந்த 14 மணி நேரத்தில் 6 பேரை கைது செய்துள்ளனர். இக்கொலை தொடர்பாக ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த முத்து மகன்மாரி (49), அவரது மகன்கள் இசக்கி (19), செல்வம் (21), சரஸ்வதி (50),உறவினர்களான அதே பகுதியைச்சேர்ந்த பேச்சிமுத்து மகன்கசமுத்து (66), செல்லத்துரை மகன் சுந்தர் (42) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர் என்றார் எஸ்பி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT