Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM
அருப்புக்கோட்டை பாளையம் பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மனைவி சுமதி(52). திருச்சுழி அருகே உள்ள செம்பொன் நெருஞ்சி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிகிறார்.
பள்ளியில் கழிப்பறை கட்டும் பணி நடைபெறுவதால் அதைப் பார்ப்பதற்காக சுமதி நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்றார். வழக்கம்போல் அருப்புக்கோட்டையில் இருந்து பனையூருக்குப் பேருந்தில் சென்றார். அங்கிருந்து அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபருடன் பைக்கில் செம்பொன் நெருஞ்சி கிராமத்துக்கு சென்றார்.
செல்லையாபுரம் சென்றபோது வழி மாறிச் செல்வதை அறிந்த சுமதி, பைக்கை ஓட்டி வந்தவரிடம் கேட்டார். ஆனால், மர்ம நபர் பைக்கை நிறுத்தி சுமதி கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் கொண்ட 3 தங்கச் சங்கிலிகளைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இது குறித்த புகாரின்பேரில் திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT