Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

முடிதிருத்தும் தொழிலாளியை ஊரை விட்டு ஒதுக்கியோர் மீது நடவடிக்கை கோரி மனு

விருதுநகர்: விருதுநகர் ஆட்சியரிடம் தேச மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பரத்ராஜா அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: திருச்சுழி அருகே உலக்குடியில் முடிதிருத்தம் தொழிலாளி பஞ்சவர்ணம் என்பவரது குடும்பத்தை கடந்த மாதம் அக்கிராமத்தினர் சிலர் ஊரைவிட்டு தள்ளி வைத்தனர். இதுதொடர்பாக ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் பஞ்சவர்ணம் புகார் அளித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது பஞ்சவர்ணம் குடும்பத்தினர் கோயில்களில் தஞ்சம் புகுந்து அஞ்சி வாழ்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பஞ்சவர்ணம் குடும்பத்தினரை, அவர்களது சொந்த ஊரிலேயே வசிக்கவும், தொழில் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தங்கள் அலுவலகத்திலேயே அனைத்துக் குடும்பங்களும் குடியேறி கஞ்சி காய்ச்சிக் குடித்து பாதுகாப்பாக இருக்க அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x