Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM

விசிக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆலோசனை

கடலூர்

கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

சட்ட ஆலோசகரும், கடலூர்நாடாளுமன்ற தொகுதி செயலா ளருமான தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார்.

ஆட்டோ சங்கத் தலைவர் ரத்தினம், சங்க செயலாளர் மணிமாறன், சங்க பொருளாளர் உத்திரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி மீது அவதூறுகளை பரப்பி வரும் பாஜகவைச் சேர்ந்த ஹெச். ராஜா, குஷ்பு, காயத்ரி ஆகியோரை வன்மையாக கண்டிப்பது.

திருமாவளவன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தி நாளை கடலூரில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x