Published : 01 Nov 2020 03:14 AM
Last Updated : 01 Nov 2020 03:14 AM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 137 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி யாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 81 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 111-ஆக அதிகரித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 674-ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை 21-ஆக இருந்ததால் மொத்த பாதிப்பு 6 ஆயிரத்து 640-ஆக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,617-ஆக அதிகரித்துள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT