Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 132 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 30-ஆக அதிகரித் துள்ளது.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 639-ஆக அதிகரித் துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,612-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத் தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,563-ஆக அதி கரித்துள்ளது.இவர்களில் 16,952 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 261 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT