Published : 30 Oct 2020 03:14 AM
Last Updated : 30 Oct 2020 03:14 AM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 114 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 71 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 968-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக நேற்று 17 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 596-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,588-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 119 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,493-ஆக அதிகரித்துள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT