Published : 16 Dec 2021 03:07 AM
Last Updated : 16 Dec 2021 03:07 AM

காளையார்கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு - சொர்ணகாளீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் நிரம்பியது :

தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காணப்படும் காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயில் தெப்பக்குளம்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள சொர்ணகாளீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் 16 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.

காளையார்கோவிலில் சொர்ண காளீஸ்வரர் கோயில் உள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோயில் அருகே தேவேந்திரனுடைய வெள்ளை யானை சாப விமோ சனம் பெறுவதற்காக ஊற்று தோண்டி சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டதாக ஐதீகம். இது நாள டைவில் ஆனைமடு தீர்த்தம் என அழைக்கப்பட்டது. 12 ஏக்கரில் உள்ள இந்த தெப்பக்குளத்தின் நடுவே கலைநயத்துடன் மைய மண்டபம் உள்ளது.

இங்கு வைகாசி விசாக விழாவின்போது தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

8 கி.மீ. தூரத்தில் உள்ள மேப் பல் பகுதியில் இருந்து இந்த தெப்பக்குளத்துக்கான வரத்து கால் வாய் உள்ளது. இக்கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற் பட்டதால் 2005-ம் ஆண்டுக்கு பிறகு இந்த தெப்பக்குளம் வறண்டு காணப்பட்டது.

இந்நிலையில் 2019-ம் ஆண் டில் தெப்பக்குளத்துக்கான வரத்துக் கால்வாய் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் முயற்சியால் தூர்வாரி சீரமைக் கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு தெப்பக்குளம் பாதியளவு நிரம்பியது.

சமீபத்தில் பெய்த தொடர்மழை காரணமாக வரத்து கால்வாயில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தெப்பக்குளம் முழுமையாக நிரம் பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x