Published : 13 Dec 2021 03:07 AM
Last Updated : 13 Dec 2021 03:07 AM
சில்லறை விற்பனை சந்தைகளைவிட விலை குறைவாக இருப்பதால், பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விரைவாக விற்றுவிடுகின்றன.
கடந்த 2 நாட்களாக கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.50 - ரூ.60 வரையும், சில்லறை விற்பனை சந்தைகளில் ரூ.60 - ரூ.70 வரையும் விற்கப்படுகிறது.
அதே நேரம், டியூசிஎஸ் பண்ணை பசுமை கடைகளில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.53-க்கு விற்கப்படுகிறது. ஒரு நகரும் பண்ணை பசுமை கடை, 6 இடங்களில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் நவ.24முதல் கடந்த 11-ம் தேதி வரை 16 டன்னுக்கு மேல் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT