Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM
சென்னை மாநகராட்சி வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்ப
தாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், சென்னையில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தனி நபர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களுக்கு கடனுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தில் 30 சதவீதம் மகளிரும், 3 சதவீதம் மாற்றுத் திறனாளிகளும்,15 சதவீதம் சிறுபான்மையினரும் பயன்பெறுவர். தனிநபருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும்.
நகர்ப்புற தெருவோர வியாபாரிகள் மற்றும் நலிவடைந்தோருக்கு, இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், சுய உதவிக் குழுக்கள் அல்லது நகர்ப்புற ஏழைகள் குழுவாக இணைந்து, சுயதொழில் செய்வதற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் குழு அமைக்க குறைந்தது 3 பேர் இருக்க வேண்டும். அதில் 70 சதவீதம் நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கு ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தினால், கூடுதலாக 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 94440 94247, 94440 94248, 94440 94249 ஆகிய செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், திட்ட அலுவலர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், எண்.100, அண்ணா சாலை, கிண்டி,சென்னை-600 03 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT