Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM
அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்இருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர், சென்னைக்கு மின்சார ரயில்களில் வந்து செல்கின்றனர். மேற்கண்ட 2 தடங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களை இயக்கும் வகையில் நடைமேடைகள் விரிவாக்கப்பட்டுள்ளன.
ஆனால், பெரும்பாலான நேரங்கங்களில் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் இயக்குவதில்லை. 9 அல்லது 8 பெட்டிகள் கொண்ட ரயில்களே அதிகளவில் இயக்கப்படுகின்றன. இதனால், காலை மற்றும் மாலை என அலுவலக நேரங்களில் பயணிகள் நிற்க இடமின்றி படிக்கட்டுகளிலும் ஜன்னல் கம்பிகளிலும் தொங்கியபடி பயணிக்கின்றனர்.
இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது:
12 பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்க நடைமேடைகள்விரிவாக்கம் செய்தும், தற்போது 3 அல்லது 4 சர்வீஸ்கள் மட்டும் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான நேரங்களில் 9 பெட்டிகள் மட்டுமே இணைத்து இயக்குவதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் இயக்கப்படும் ரயில்களில் குறுகிய கதவுகள் இருப்பதால், பயணிகள் ஏறி, இறங்குவதிலும் சிரமப்படுகின்றனர்.
எனவே, சென்னை கடற்கரை –தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்குவதுபோல் அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் முழு அளவில் இயக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT