Published : 11 Dec 2021 03:13 AM
Last Updated : 11 Dec 2021 03:13 AM

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் - ரூ.1.48 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

திருப்பத்தூர்

திருப்பத்ததுார் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 1,741 நபர்களுக்கு ரூ.1 கோடியே 48 லட்சம் மதிப் பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளதாக ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, ‘‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை முதல்வர் உருவாக்கினார்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட துறை மூலம், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ், திருப்பத்துார் மாவட்டத்தில் 2,218 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில் 1,741 மனுக்கள் ஏற்கப்பட்டன.

477 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு தகுதியுள்ள மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் 32 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் குடும்ப அட்டைகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 122 நபர்களுக்கு ரூ.14 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 6 நபர்களுக்கு ரூ.8 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை, ஊரக வளர்ச்சி துறையின் மூலம் 280 நபர்களுக்கு ரூ.1 கோடியே 22 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 1,741 நபர்களுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் https: //cmhelpline.tnega.org அல்லது IIPGCMS என்ற இணையதள முகவரியிலும், 1100 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

இது தொடர்பாக மேலும் விவரம் தேவைப்படுவோர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை அணுகலாம்’’ என்றார்.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ், திருப்பத்துார் மாவட்டத்தில் 2,218 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x