Published : 10 Dec 2021 03:07 AM
Last Updated : 10 Dec 2021 03:07 AM
கடலூர் புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோயில் கும்பா பிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது.
கடலூர் புதுப்பாளையத்தில் செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபாலசாமி கோயிலில் கடந்த 2003-ல் கும்பாபிஷேகம் நடந்தது. கோயில். சன்னிதிகள் பஞ்சவர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக பிரதான ராஜகோபுரம், புனித தீர்த்தகுளம் புதுப்பிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை 8.30 மணிக்கு மூலவர் சன்னிதி விமான கலசம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னிதி கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. மாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு புதிய இந்திர விமானத்தில் உபயநாச்சியார் சமேதமாக பெருமாள் கோயில் உள்பிரகார புறப்பாடு நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் ,நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி,கடலூர் எம்எல்ஏ கோ.ஐயப்பன்,கடலூர் ஜிஆர்கே எஸ்டேட்ஸ் நிர்வாக இயக்குநர் ஜிஆர்.துரைராஜ் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT