Published : 10 Dec 2021 03:08 AM
Last Updated : 10 Dec 2021 03:08 AM
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து காவல்துறை சார்பில், பாளையங்கோட்டை சாரதா கல்லூரி மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பேசியதாவது:
முகநூல் பக்கத்தில் குற்றங்கள் அதிகமாக ஏற்படுகின்றன. முன்பின் தெரியாத முகம் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். முதலில் அன்பாக பேசுவதுபோல்பேசி காதல் வலையில் வீழ்த்தி, ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சேமித்து வைத்துக்கொண்டு, அதை வைத்து மிரட்டி பண மோசடியில் ஈடுபடும் கும்பல் முகநூலில் அதிகமாக உள்ளது.
முன்பின் தெரியாத நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, `முதலில் சிறிய தொகை கட்டினால் போதும்; வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறோம்’ என்பார்கள். இதை நம்பி ஏமாற வேண்டாம்.
வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, உங்கள் வங்கி கணக்கு எண்ணைக் கேட்டாலோ, அல்லது சிறிய தொகையை முதலில் கட்டுமாறு கூறினாலோ அதை நம்பி ஏமாற வேண்டாம். ஆபாசமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஆன்லை னில் பதிவிடுவதும், பதிவிறக்கம் செய்வதும் குற்றமாகும். சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து, 155260 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து உங்கள் பெற்றோரிடமும் எடுத்துக் கூறுங்கள் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT