Published : 08 Dec 2021 04:08 AM
Last Updated : 08 Dec 2021 04:08 AM
ஈரோடு இந்தியன் பப்ளிக் பள்ளியின் இரு மாணவியர் கேம்பிரிட்ஜின் சிறந்த மாணவர்களுக்கான விருது பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்பில் ஐஜிசிஎஸ் மற்றும் ஏஎஸ் மற்றும் ஏ லெவல் தேர்வு பாடங்களில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. நவம்பர் 2020 மற்றும் மார்ச் 2021 தேர்வு தொடரில், சிறந்த கல்வி சாதனைகளுக்கான 177 விருதுகளில், 150 விருதுகள் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில், நவம்பர் தொடருக்கான கேம்பிரிட்ஜ் உயர் சாதனை விருதினை ஈரோடு தி இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவி குஷி பராக், நாட்டின் முதலிடத்திற்கான விருதினை ரிதிவர்ஷா ஆகியோர் பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து 42 மாணவர்கள் உலகளவில் முதலிடத்தையும், 65 மாணவர்கள் நாட்டில் முதலிடத்தையும், 17 மாணவர்கள் பாடவாரியாக முதலிடத்தையும் பெற்றனர்.
விருது பெற்ற மாணவர்களை கேம்பிரிட்ஜ் அசெஸ்மென்ட் இன்டர்நேஷனல் கல்வியின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் மகேஷ் வஸ்தவா,டிஐபிஎஸ் ஈரோடு நிர்வாக இயக்குநர் ஷிவ்குமார், பள்ளி முதல்வர் ஆஷிஷ் பட்நாகர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT