Published : 06 Dec 2021 03:08 AM
Last Updated : 06 Dec 2021 03:08 AM
ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பொதுமக்களிடம் குறைகேட்கும் முகாம் நடைபெற்றது. நங்கநல்லூர் நேரு காலனியில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.
இது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறும்போது, ‘‘கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற முகாம்களில் 1,600 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.
கடந்த 2 நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. இவற்றின் மீதும் தொடர்புடைய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT