Published : 29 Nov 2021 03:07 AM
Last Updated : 29 Nov 2021 03:07 AM
தொடர் கன மழை பெய்து வருவதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாது காப்பாக இருக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீரோட்டம் அதிகமாகவும், பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் நிரம்பியும் உள்ளன. ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் ஆற்றில் குளித்தல், நீந்துதல், மீன்பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
நீர் நிலை அருகில் சென்று புகைப்படங் களோ அல்லது சுயபடங்களோ (செல்பி) எடுப் பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை நீர்நிலைகளின் அருகே அனுமதிக்காமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.மேலும் விவசாயிகள் ஆறுகளில் அதிக நீரோட்டம் இருக்கும்பொழுது நீர்நிலைகளை கடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசன் மாவட்டத்தில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, காவல்துறை யினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து நேற்று கடலூர் முதுநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளிகாரைக்காடு யாதவர் தெரு பகுதியில் உள்ள சுமார் 30 குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதாக பொதுமக்களிடமிருந்து தகவல் வந்தது.
இதனையடுத்து கடலூர் முதுநகர் காவல்நிலைய ஆய்வாளர் உதயகுமார் தலை மையில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீஸார் அப்பகுதியில் நேரில் சென்று கண்காணித்தனர். பஞ்சாயத்து தலைவர் மற்றும் நிர்வாக அலுவலர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். பின்னர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை ஜேசிபி இயந்திரம் மூலம் வடிகால் வழி ஏற்படுத்தி மழை தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT