Published : 22 Nov 2021 03:06 AM
Last Updated : 22 Nov 2021 03:06 AM
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு சேலத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் முருகபெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் திருவேரங்கன் வரவேற்றார். பொருளாளர் செல்வம் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாநில துணைத் தலைவர் சீனிவாசன் பேசினார்.
மாநாட்டில்,‘ஆதிசேஷய்யா தலைமையிலான பணியாளர் சீரமைப்பு குழுவின் பரிந்துரைகளை ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை கைவிட வேண்டும்.
தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள 4.50 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சத்துணைவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட பணிகளில் காலமுறை ஊதியம்,தொகுப்பூதியம் பெற்று வரும் 3.50 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், மாவட்ட செயலாளர் சுரேஷ், சிஐடியு மாவட்ட தலைவர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT