Published : 16 Nov 2021 03:10 AM
Last Updated : 16 Nov 2021 03:10 AM
மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் திருச்சி ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் ஷோரூம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 270-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், ராமநாதபுரம், தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நகரங்களில் 17 கிளைகளைக் கொண்டுள்ளது.
திருச்சி ஷோரூமில் தொடங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நகைகள் ஒவ்வொன்றும், அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும் அனைத்து நகைகளின் கலைநயத்தையும் நிரூபிக்கும் வகையில் உள்ளன.
இந்த கண்காட்சியை வாடிக்கையாளர்கள் முத்துக்குமார், காயத்ரி, ரவீந்திரநாத், லீனா, செல்வம், ஷேக் அப்துல்லா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருச்சி மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் கிளைத் தலைவர் ஜோசப் பியுஸ், துணைத் தலைவர் ஷேக் தாவூத், துணை வர்த்தக மேலாளர் திவாகர் மற்றும் கிளை ஊழியர்கள் பங்கேற்றனர்.
அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான `மைன்’ பிரம்மாண்டமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட `ஏரா’, மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான `பிரீசியா’, கைவினைக் கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான `எத்தினிக்’, நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான `டிவைன்’, குழந்தைகளுக்கான நகை தொகுப்பான `ஸ்டார்லைட்’ ஆகியவை இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதுதவிர அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் வாங்கவும் வாய்ப்புள்ளது. கலைநயமிக்க இந்த கண்காட்சி கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். நவ.13-ம் தேதி தொடங்கிய இக்கண்காட்சி, நவ.21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT