Published : 12 Nov 2021 03:16 AM
Last Updated : 12 Nov 2021 03:16 AM
குமராட்சி அருகே ஒட்டரபாளை யத்தில் கொள்ளிட ஆற்று வெள்ளநீரில் சிக்கிய மாடுகளை தீயணைப் புத் துறையினர் மீட்டனர்.
குமராட்சி அருகே முள்ளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டர பாளையம் கிராம மக்களின் சுமார் 20 மாடுகள் நேற்று கொள்ளிடம் ஆற்றுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றன. மாடுகள் கொள்ளிடம் ஆற்றில் நடுவில் உள்ள திட்டு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் கீழணையில் அதிக அளவில் தண்ணீர் திறந்ததால் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாடுகள் வெள்ளத்தில் சிக்கின. வெள்ளத்தில் சிக்கிய மாடுகளைக் மீட்டுத்தர வேண்டும் என்று மாடுகளின் உரிமையாளர்கள் சென்னையில் உள்ள தீயணைப்பு நிலைய நவீன கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிதம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.
இதனையடுத்து உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆறுமுகம் தலைமையில் சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி, சிறப்பு நிலை அலுவலர்(போக்குவரத்து) எழிலன், சிறப்பு நிலைய அலுவலர் நவநீத கண்ணன், தீயணைப்பு வீரர்கள் சின்னராஜ்,விஜயன், பாலு, ஞானவேல் ,ராஜ்குமார், மணிபாலன் குமரேசன், சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் ரப்பர் படகுகளுடன் கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு சென்று வெள்ளத்தில் சிக்கி தவித்த மாடுகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மாடுகளை மீட்ட தீயணைப்பு துறையினரை அக்கிராம மக்கள் பராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT