Published : 06 Nov 2021 03:07 AM
Last Updated : 06 Nov 2021 03:07 AM

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூரில் - தீபாவளியையொட்டி 2 நாட்களில் ரூ.31.86 கோடிக்கு மது விற்பனை :

திருச்சி/ பெரம்பலூர்/ கரூர்

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாளில் ரூ.31.86 கோடிக்கு மதுபானம் விற்பனை யாகி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத் தம் 183 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் வழக்கமாக ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.4 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெறும். இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவ.3-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் ரூ.8.40 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றது.

தொடர்ந்து, தீபாவளி நாளான நேற்று முன்தினம் திருச்சி மாவட்டத்தில் ரூ.8.46 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற் றுள்ளது. இது, திருச்சி மாவட் டத்தில் நாள்தோறும் நடைபெறும் சராசரி மதுபான விற்பனையைவிட 2 மடங்கு அதிகம்.

கடந்தாண்டு தீபாவளி பண் டிகை நாளில் ரூ.8.35 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்று இருந்தது.

பெரம்பலூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கட்டுப்பாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 36 கடைகளும், அரியலூர் மாவட் டத்தில் 52 கடைகளும் என மொத்தம் 88 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நிக ழாண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ.8.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.

தீபாவளிக்கு முந்தைய தினமான நவ.3-ம் தேதி ரூ.3.5 கோடிக்கும், தீபாவளி தினமான நவ.4-ம் தேதி ரூ.4.75 கோடிக்கும் என இரு நாட்களில் மொத்தம் ரூ.8.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக டாஸ் மாக் அலுவலர்கள் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டத்தில் 91 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு இங்குள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 3-ம் தேதி ரூ.3.25 கோடி, தீபாவளியான நேற்று முன்தினம் ரூ.3.50 கோடி என 2 நாட்களில் ரூ.6.75 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x