Published : 06 Nov 2021 03:07 AM
Last Updated : 06 Nov 2021 03:07 AM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 14 கோடியே 84 லட்சம் ரூபாய்க்குமதுபானங்கள் விற்பனையாகி யுள்ளன.
ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் வழக்கத்தை காட்டிலும் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை அதிகரிக்கும்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. நிர்வாக வசதிக்காக வேலூர் - திருப்பத்தூர் மாவட்டங்களில் 115 கடைகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 88 கடைகளும் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி 203 டாஸ்மாக் மதுபானக்கடைகளில் கடந்த 2 நாட்களாக மதுவிற்பனை களைக்கட்டியது.
அதன்படி, வேலூர் - திருப்பத்தூர் மாவட்டங்களில் கடந்த 3-ம் தேதி 4.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை யாகியுள்ளன. 4-ம் தேதி தீபாவளி பண்டிகையன்று வேலூர் - திருப்பத்தூர் மாவட்டத்தில் 4.80 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி 2.95 கோடிக்கும், 4-ம் தேதி 2.71 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2 நாட்களில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ரூ.14.84 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT