Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம், திருச்சியில் நேற்று காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, புத்தூர் நான்கு சாலையில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கும் கட்சியின் மாவட் டத் தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜன், கலை ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சி யினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத் தில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவர் சுப்பிரமணி யன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று, மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில், வட்டாரத் தலைவர் முருகேசன், நகரத் தலைவர் செந்தில், சுப்பன், சின்னையன், புலவர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, கரூர் ஜவஹர் பஜார் காமராஜர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி படத்துக்கும் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தியின் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் மிஷின் தெருவில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு மாவட்டத் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து, தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் கோ.அன்பரசன், மாவட்ட ஐஎன் டியுசி பொதுச் செயலாளர் மோகன்ராஜ், நிர்வாகிகள் பிரபு, ரவிச்சந்திரன், சதா.வெங்கட் ராமன், ரமேஷ், சுவீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில், இந்திரா காந்தி யின் படத்துக்கு ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் உள்ளிட்டோர் மலர் தூவி, மரியாதை செலுத்தி னர்.தொடர்ந்து, மும்மத பிரார்த்தனையும், மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT