Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM
கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
பாஜக நிர்வாகிகளுக்கு பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான பயிற்சி முகாமை தொடங்கிவைக்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த 5 மாதங்களாக இந்து கோயில்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டம் கடம்பூர் ஒன்றியத்தில் அம்மன் கோயில் தாக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் சிறு வாச்சூர் கோயில்களில் சிலை கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை அறநிலையத் துறையின் நிர்வாக திறமையின்மைக்கு எடுத்துக் காட்டு. இச்சம்பவங்களில் தொடர் புடைய உண்மையான குற்றவாளி களை அரசு கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தில் அனைத்து கோயில்கள் முன்பு போராட்டம் நடத்துவோம். கோயில் சிலை உடைப்பு வழக் கின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழக அரசு பரிந் துரைக்க வேண்டும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவில் ஆகம விதியை மீறக்கூடாது. அரசு அறங்காவலர்களை நியமிக்க வேண்டும், அறங்காவலர்கள் குழுவினர் தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை திருட்டு, தங்கம் முறைகேடு உள்ளிட்ட குற்றச் சாட்டுக்கு உள்ளானவர்கள் பலர் அறநிலையத் துறையில் பணிபு ரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் அறநிலை யத் துறையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தன் திட்டங்கள் போல செயல்படுத்துகிறது. தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது பிரதமர் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT