Published : 31 Oct 2021 03:10 AM
Last Updated : 31 Oct 2021 03:10 AM
விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் 7-வது மாபெரும் கரோனா தடுப் பூசி சிறப்பு முகாம் நேற்று 1,162 மையங்களில் நடைபெற்றது.
பசும்பொன்னில் நேற்று நடைபெற்ற தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொண்ட பின்னர், முதல்வர் ஸ்டாலின் காரில் மதுரை திரும்பினார்.
மதுரை விமான நிலையம் செல் லும் வழியில், அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கரோ னா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப் பினர்கள் சீனிவாசன், தங்கப் பாண்டியன், விருதுநகர் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT