Published : 31 Oct 2021 03:11 AM
Last Updated : 31 Oct 2021 03:11 AM
114-வது ஜெயந்தி விழாவையொட்டி திருச்சியிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள அவரது சிலைக்கு அருகே அகில இந்திய பார்வர்டு பிளாக் (கதிரவன்) கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
அதைத்தொடர்ந்து மத்திய மாவட்ட திமுக சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தெற்கு மாவட்ட திமுக சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முத்துராமலிங்கத் தேவரின் படத்துக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தில்லைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி தலைமையில் முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.செல்வராசு, பரமேஸ்வரி, டி.இந்திராகாந்தி உள்ளிட்டோர் முத்துராமலிங்கத் தேவரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாவட்டப் பொருளாளர் ராஜா நசீர், அமமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் மனோகரன், ராஜசேகர், கலைச்செல்வன், மாநில அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு (மாநகர்), மணவை தமிழ் மாணிக்கம் (புறநகர் தெற்கு), மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் ரொஹையா, பாஜக சார்பில் மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தலைமையில் மாநகர் மாவட்டத் தலைவர்கள் ராஜசேகர், ராஜேந்திரன், தேமுதிக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் டி.பி.கணேசன், பாமக சார்பில் மாவட்டச் செயலாளர் திலீப் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, வினோத் உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுதவிர பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சாத்தனூர், தாராநல்லூர், துவாக்குடி, உறையூர், திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் சுமந்து வந்து முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு வழிபாடு நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT