Published : 28 Oct 2021 03:08 AM
Last Updated : 28 Oct 2021 03:08 AM
தேனி அரண்மனைப்புதூர் அருகே உள்ளது வேதபுரி. இங்குள்ள தட்சிணா மூர்த்தி கோயிலில் கடந்த 26 அதிகாலையில் 9 ஐம்பொன் சிலைகள் திருடு போயின.
ஆசிரம மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீ ஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் பால்சுந்தர், முத்துக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக் கப்பட்டன.
தனிப்படையினரின் விசாரணையில் தேனி மாவட்டம், பெரியகுளம் மில்லர் சாலையைச் சேர்ந்த தர் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்து விசாரித்ததில் பெரியகுளத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் சேர்ந்து சிலைகளை திருடி யது தெரிந்தது.
24 மணி நேரத்தில் 9 சிலைகளும் மீட்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT