Published : 26 Oct 2021 03:07 AM
Last Updated : 26 Oct 2021 03:07 AM

பட்டா வழங்கக்கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம் :

தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய்அலுவலர் ஜனனி சவுந்தர்யா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 418 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புத் திட்டம்) ஷீலா உட்படபலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாமக மாநில துணை பொதுச் செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் அய்யம்பெருமாள், சேது. அரிகரன்,மாநில இளைஞரணி செயலாளர்ராம்குமார், மாவட்ட தலைவர்குலாம், மாவட்ட செயலாளர் சீதாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனுவில், ‘இலஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட ஜவகர் காலனியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 20 பேருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீடுகள் வழங்கப்பட்டன. தற்போது வரை வீடுகளுக்கான பட்டா வழங்கப்படாமல் உள்ளது.

பழுதடைந்து காணப்படும் வீடுகளை பராமரிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பட்டா வழங்கக் கோரிஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x