Published : 23 Oct 2021 03:08 AM
Last Updated : 23 Oct 2021 03:08 AM

ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக :

ஈரோடு

ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது.

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 6 கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில், தி.மு.க, அ.தி.மு.க ஆகியவை தலா மூன்று இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, ஒன்றியக்குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மூன்று முறை அறிவிக்கப்பட்டது. அப்போது, திமுக உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றதால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் 4 -வது வார்டு அ.தி.மு.க உறுப்பினர் மறைவையடுத்து, நடந்த இடைத்தேர்தலில் திமுக உறுப்பினர் விவேகானந்தன் வெற்றி பெற்றார். இதனால் தி.மு.க.வின் பலம் 4 ஆகவும், அ.தி.மு.க.வின் பலம் இரண்டாகவும் குறைந்தது. ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்த தலைவர் தேர்தலில், திமுக சார்பில் 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரகாஷ் தலைவராகவும், விவேகானந்தன் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x