Published : 18 Oct 2021 03:12 AM
Last Updated : 18 Oct 2021 03:12 AM
துலா மாத பிறப்பை முன்னிட்டு, ரங்கம் நம்பெருமாள் திருமஞ்ச னத்துக்காக காவிரி ஆற்றிலிருந்து தங்கக் குடத்தில் புனித நீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து கோயிலுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதத் தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. துலா மாதத்தில் ஒருநாள் ரங்கம் காவிரியில் புனித நீராடி அரங்கனை தரிசனம் செய்தால், காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவர்.
துலா மாத பிறப்பை முன்னிட்டு, காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து நேற்று தங்கக் குடத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. திருமஞ்சனம் உற்சவத்தை யொட்டி, நம்பெருமாள் மூலஸ் தானத்திலிருந்து நேற்று காலை 10 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். முற்பகல் 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 5.30 மணிக்கு சந்தனு மண்டபத் திலிருந்து புறப்பட்டு 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
துலா மாதத்தில் நம்பெருமா ளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்கத்தால் செய்யப்பட்ட பாத்திரங்களிலேயே நடைபெறும்.
35 ஆண்டு சேவை
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் யானை ஆண்டாள் 1986-ம் ஆண்டு அக். 16-ம் தேதி தனது முதல் சேவையாக துலா மாதம் காவிரி ஆற்றில் இருந்து தங்கக் குடத்தில் புனிதநீர் எடுத்து வந்தது. அன்று முதல் நேற்று வரை 35-வது ஆண்டாக காவிரி ஆற்றிலிருந்து தங்கக் குடத்தில் புனிதநீரை ஆண்டாள் யானை கொண்டு வந்து தனது சேவையை செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT