Published : 11 Oct 2021 03:14 AM
Last Updated : 11 Oct 2021 03:14 AM
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் மருத்துவர் த.ராசலிங்கம் தலைமை வகித் தார். பொருளாளர் கே.சி.நீல மேகம், துணைத் தலைவர் மதுரை அசோகன், துணைச் செயலாளர் கரூர் சுகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் லெ.பாஸ்கரன் செயல்திட்டங் கள் குறித்து பேசினார்.
சிறந்த சேவைக்கான டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி விருது திருச்சி கே.சி.நீலமேகம், திரு வள்ளுவர் விருது பெரம்பலூர் பெரியசாமி, டாக்டர் ஏ.சண்முகம் விருது தஞ்சை முருகானந்தம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மேலும், மக்களின் நலன்காக் கும் வகையில் தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும். மத்தியில் லோக்பால், மாநிலத்தில் லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலன்கருதி அனைத்து பள்ளியி லும் நீதிபோதனை வகுப்பை நடத்த வேண்டும். தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும் மக்களால் வழங்கப்படும் விண் ணப்பங்களுக்கு ஒப்புதல் சீட்டு வழங்க வேண்டும். நதிகளை புனரமைத்து, இயற்கை வளங் களை பாதுகாக்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தூத்துக்குடி கந்தசாமி, மதுரை சேகர், புதுக் கோட்டை கணேசன், சிவகங்கை புகழேந்தி, தஞ்சை முருகா னந்தம், கரூர் விசுவநாதன், பெரம் பலூர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலாளர் ஆர்.இளங்கோ வர வேற்றார். மாநகரச் செயலா ளர் ஆர்.வாசுதேவன் நன்றி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT