Published : 09 Oct 2021 03:11 AM
Last Updated : 09 Oct 2021 03:11 AM

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது :

விருதுநகர்

போக்ஸோ வழக்கில் தொடர் புடைய 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர்.

அருப்புக்கோட்டை அருகே தாதம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (31), 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கைது செய்யப் பட்டார். இதேபோல் பெரிய புளியம்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (48), 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸாரால் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி மனோகர் பரிந்துரை செய்தார். அதையேற்று ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து பெருமாள், லட்சுமணன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x