Published : 09 Oct 2021 03:13 AM
Last Updated : 09 Oct 2021 03:13 AM
தி.மலை மாவட்டம் செய்யாற்றில் மணல் கொள்ளையை தடுக்காமல் இருக்க காவல் துறையினருக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக் கப்படுவதாக வெளியான ஆடியோ அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக போலீஸ்காரர் ஒருவரிடம் மணல் லாரி உரிமை யாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், தனியார் பேருந்து உரிமையாளர் மற்றும் காவல் அதிகாரி ஒருவரிடம் பேசும் 6 ஆடியோக்கள் மற்றும் ஒரு வீடியோ ஆகியவை சமூக வலை தளத்தில் வெளியாகியுள்ளன.
அந்த ஆடியோவில் பேசும் போலீஸ்காரர், "மணல் கடத்தி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. போலீஸ் வேலை வேண்டாம் என எழுதி கொடுத்துவிட்டு கூலி வேலைக்கு சென்றுவிடலாம். ஏழைகளிடம் இருந்து அபராதம் வசூல் செய்யும் நிலை உள்ளது. பணக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. பிடிக்கப்படும் மணல் லாரிக்காரர்கள், காவல் ஆய்வாளரை கவனித்து வருகிறோம் என கூறினால் என்ன செய்ய முடியும்" என்கிறார்.
மேலும் அவரிடம் மறுமுனையில் பேசுபவர்கள், "காவல் ஆய்வாளர் அண்ணாதுரைக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் கொடுக்கிறோம்" என பகிரங்கமாக கூறுகின்றனர். அதே போல், போலீஸ்காரரிடம் பேசும் காவல் அதிகாரி ஒருவர், இதில் கூடுதல் எஸ்பி வரை தலையீடு இருப்பதால், பிடிக்கப்பட்ட மணல் லாரியை விடுவிக்க உத்தரவிடுகிறார் என கூறப்பட்டுள்ளது. மேலும், அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பேருந்து உரிமை யாளர் பேசும்போது, காவல் ஆய் வாளரை சந்தித்து வருவதாக கூறுகிறார்.
சமூக வலைதளத்தில் வெளியான 6 ஆடியோ மற்றும் ஒரு வீடியோ ஆகியவை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பவன்குமாரின் கவனத்துக்கு சென்றுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் ஒருவரே ஆடியோ வெளியிட்டுள்ளது உறுதியானது.
இதையடுத்து குற்றஞ் சாட்டப் பட்டுள்ள காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு போலீஸ் காரர் மற்றும் ஆடியோ வெளியிட்ட போலீஸ்காரர் ஆகியோரது செல் போன் எண்களை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் காவல்துறை வாட்ஸ்அப் குழு வழியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தூசி காவல் நிலையம் தொடர்பான ஆடியோவில் பேசிய நபர், உள்ளாட்சித் தேர்தல் பாது காப்பு பணிக்காக வெளி மாவட்டம் சென்றுள்ளார். அவர், பணி முடிந்து திரும்பியதும், அவரிடம் விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT