Published : 03 Oct 2021 03:13 AM
Last Updated : 03 Oct 2021 03:13 AM

நெல்லை மாவட்டத்தில் பதற்றமான - 111 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொருத்த ஏற்பாடு :

திருநெல்வேலி மாவட்டத்தில் 111 பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்க வெப் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. வரும் 6-ம் தேதி முதற்கட்டமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை மற்றும் பாப்பாக்குடி ஒன்றியங் களுக்கும், வரும் 9-ம் தேதி 2-ம் கட்டமாக களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

மொத்தம் 1,188 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 9,567 அலுவலர்கள் பணியாற்றுகி றார்கள். மொத்தம் 333 வாக்குச் சாவடிகள் பதற்றமான வையாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 111 பதற்றமான வாக்குச் சாவடிகளை நேரடியாக கண்காணிக்க வெப் கேமராக்கள் பொருத்தப் படவுள்ளது. மேலும் இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு வீடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படவுள்ளது. 120 நுண் பார்வையாளர்கள் மூலம் மீதமுள்ள வாக்குச் சாவடிகள் கண்காணிக்கப்படவுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருநெல் வேலி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர் ஜெ. ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, ‘‘நுண் பார்வையாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை வாக்குப்பதிவுக்கு முதல் நாளில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

வாக்குப்பதிவு நாளில் வாக்குச் சாவடி நடைமுறைகளை கண்காணித்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். முறையான அடையாள அட்டை வைத்துள்ள வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப் பதிவு மையத்தில் எவ்வித பிரச்சினை களும் ஏற்படாத வகையில் கண்காணிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

திட்ட அலுவலர் பழனி, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, முன்னோடி வங்கி மேலாளர் கிரேஸ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராம்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x