Published : 01 Oct 2021 03:20 AM
Last Updated : 01 Oct 2021 03:20 AM

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்துக்கு மத்திய அரசு அனுமதி : மறுபரிசீலனை செய்ய சட்டப் பேரவை தலைவர் வலியுறுத்தல்

திருநெல்வேலி

கூடங்குளம் அணுமின் நிலையத் தின் முதல் மற்றும் 2-ம் அணு உலைகளின் அணுக்கழிவுகளை கூடங்குளம் அணுமின் நிலைய த்திலேயே வைப்பதற்கு ஏற் கெனவே மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. தற்போது, 3 மற்றும் 4-வது அணுஉலைகளின் அணுக்கழிவுகளையும், இங்கேயே வைப்பதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறியதாவது:

கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 3, 4, 5, 6 ஆகிய அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இந்த பகுதியில் அணுக்கழிவுகளை சேமிக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். காரணம் இந்த பகுதியில் இருந்து 800 கி.மீ. தூரம் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். இங்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால் தமிழகம், கேரளா மற்றும் தென் மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்படும். மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது என்பதை மத்திய அரசுக்கு கோரிக்கையாக தெரிவித்துள்ளேன். மத்திய அரசு இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மக்கள் வாழ தகுதியற்ற பாலைவனம் போன்ற இடங் களில் அணுக்கழிவு மையம் அமைக்கப் பட வேண்டும். இதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்: கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகளின் அணுக் கழிவுகளை அங்கேயே சேமித்து வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய மத்திய அரசு ஆணையிட்டு ள்ளது. அணுக் கழிவுகளை பாதுகாப்பதற்கான பாதாள கட்டமைப்பு வேறு இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் இது.

அணுக்கழிவுகளில் இருந்து கதிர்வீச்சு ஏற்பட்டால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட்டு தமிழ்நாட்டுக்கு வெளியில் அணுக்கழிவு சேமிப்பு பாதாள மையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன்: கூடங்குளத் தில் அணுக்கழிவுகளை சேமித்து வைப்பதில் உள்ள நடைமுறை பிரச்சினைகள், பெரும் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு என பல்வேறு ஆபத்துகள் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேலும் ஒரு இடியாக, 3, 4 உலை களுக்காக அணுக் கழிவுகளை கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே சேமித்து வைப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். இதனை உடனடியாக கைவிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x