Published : 28 Sep 2021 03:21 AM
Last Updated : 28 Sep 2021 03:21 AM
திருச்சி மத்திய மண்டலத்தில் நேற்று 149 இடங்களில் நடைபெற்ற சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் பங்கேற்ற விவசாய, தொழிற்சங்கத்தினர், திமுக கூட்டணி கட்சியினர் 8,856 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதைக் கைவிட வேண்டும். தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையைக் குறைக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆக உயர்த்துவதுடன் நகர்ப் புறங்களுக்கும் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்தது.
திருச்சி மத்திய மண்டலத் தில் உள்ள மாவட்டங்களில் திமுக கூட்டணி கட்சியினர், விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் நேற்று சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதன்படி, திருச்சி மாநகரில் பூம்புகார் விற்பனை நிலையம் அருகிலிருந்து புறப்பட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் தெப்பக்குளம் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 900 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, ஓயாமரி சுடுகாடு அருகே காவிரிப் பாலத்தில் வைகை ரயிலை மறிப்பதற்காக காத்திருந்த மற்றும் உறையூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 100 பேரை போலீஸார் கைது செய்தனர். ஊரகப் பகுதியில் ஜீயபுரம் மற்றும் திருவெறும்பூர் ஆகிய இடங்களில் ரயில் மறியல் முயற்சி மற்றும் 20 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 800 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில்...
அரியலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட 164 பேரை போலீஸார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
கரூர் மாவட்டத்தில்...
கரூர் மாவட்டத்தில் 6 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 63 பெண்கள் உள்ளிட்ட 371 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணராயபுரம் ரயில் நிலையத்தில் திருச்சி-பாலக்காடு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்ளிட்ட 62 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில்...
தஞ்சாவூர் மாவட்டத்தில்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் உட்பட 327 பேர் கைது செய்யப்பட்டனர. இதேபோல, 27 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 1,110 பேர் கைது செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் வழக்கம்போல இயங்கின. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
நாகை, மயிலாடுதுறையில்...
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 12 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 255 பெண்கள் உட்பட 927 பேரை போலீஸார் கைது செய்தனர். திருப்பூண்டி கடற்கரைச் சாலையில் மஜக பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி பங்கேற்றார். கீழ்வேளூரை அடுத்த திருக்கண்ணங்குடியில் எம்எல்ஏ நாகை மாலி தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட1,457 பேரை போலீஸார் கைது செய்தனர். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில்...
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 46 இடங்களில் சாலை மறியல், 2 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பகல் 12 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து தொழிலாளர்கள் பெருமளவு பணிக்கு வராதநிலையில் பேருந்துகள் குறைந்தளவே இயக்கப்பட்டன.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT