Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM
திருநெல்வேலியில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் உடைத்து அழிக்கப்பட் டன.
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்தல் மற்றும் வாகனங்களில் கடத்தப்படும் மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்து வருகிறார்கள். அந்தவகையில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.13 லட்சம் மதிப்புள்ள 7,635 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மதுபாட்டில்களை அழிக்கும் பணி பெருமாள்புரம் மகிழ்ச்சி நகரில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை வட்டாட்சியர் தாஸ்பிரியன், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீஸார் முன்னிலையில் மதுபாட்டில்களை சாலையில் வரிசையாக அடுக்கி, பின்னர் ரோடுரோலர் மூலம் அவை உடைத்து அழிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT