Published : 22 Sep 2021 03:05 AM
Last Updated : 22 Sep 2021 03:05 AM
கடம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடம்பூர், ஓடியந்தல் மற்றும் மரூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்களது நகைகளை அடகு வைத்துள்ளனர்.
அடகு வைத்துள்ள நகை களை வட்டி கட்டி மீட்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடன்தாரர்கள் சென்றுள்ளனர். அப்போது உங்களது நகைகள் ஏலம் விடப்பட்டதாக அங்கு பணிபுரியும் செயலா ளர் திருநாராயணன் தெரிவித் துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் முறையான முன்னறிவிப்பின்றி நகைகள் ஏலம் விடப்பட்டதை கண்டித்து கூட்டுறவு சங்க செயலாளர் திருநாராயணனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த கடம்பூர், மரூர், ஓடியந்தல் கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கூட்டுறவு சரக கள அலுவலர் கமலகண்ணன் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தார்.
இதைத்தொடர்ந்து நகைகள்ஏலம் விடப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் முறையான அறிவிப்பு இல்லாமல் நகைகளை ஏலம் விட்டது தெரியவந்ததை அடுத்து கடம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் திருநாராயணனை பணியிடை நீக்கம் செய்து, விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
முறையான அறிவிப்பு இல்லாமல் நகைகளை ஏலம் விட்டது தெரியவந்ததை அடுத்து கடம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் திருநாராயணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT